இலங்கையில் நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு இன்று ஒக்டோபர் 01 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு முதல் நீக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஒரு சில கட்டுப்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவலின் 3ஆம் அலையின் உக்கிரத்தை அடுத்து, கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி முதல் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது