crossorigin="anonymous">
உள்நாடுபொது

கடமை நிமித்தம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்காக போதுமான பஸ்கள் சேவை

இலங்கையில் கடமை நிமித்தம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்காக இன்று (01) முதல் போதுமானளவு பஸ்கள் சேவை மாகாணங்களுக்குள் ஈடுபடுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக சுவர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 5 ஆயிரத்து 500 பஸ்கள் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

சாரதிகள், நடத்துனர்கள் உட்பட தொழில்நுட்ப பிரிவில் கடமையாற்றுபவர்களின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டு அவர்களை பணிக்கு அழைக்கத் தீர்மானித்திருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது..

அத்தியாவசிய சேவை நிமித்தம் வேறு மாகாணங்களில் சேவையாற்றுபவர்களுக்கு போக்குவரத்து வசதி வழங்குவதற்கும் போக்குவரத்துச் சபை தயாராக உள்ளது.

தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேவர்த்தன தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் எந்தவொரு கட்டண மறுசீரமைப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19 பரவலின் 3ஆம் அலையின் உக்கிரத்தை அடுத்து, கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 34 − = 29

Back to top button
error: