சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் பலா மரக் கன்றுகளை நடும் தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய திருகோணமலை மாவட்டத்தின் பிரதான நிகழ்வு இன்று (01) மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றது.
மகளிர் ,சிறுவர் அபிவிருத்தி, பாலர் பாடசாலை மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் இன்று இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
அதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் சிறுவர்கள் மூலமாக 1550 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது.
குறித்த 1550 பழ மரக் கன்றுகளும் தொடர்ச்சியாக குறித்த பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் சிறுவர்கள் மூலம் 03 வருடங்கள் பராமரிக்கப்படுவதுடன் பராமரிப்பை மேற்பார்வை செய்வதற்கான செயற்பாடும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட உள்ளது.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆர் .கே .எஸ் .குருகுலசூரிய சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.