crossorigin="anonymous">
வெளிநாடு

ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க ட்ரோன்  வருவதை நிறுத்த வேண்டும் – தலிபான்கள்

அமெரிக்க ட்ரோன்கள் ஆப்கானிஸ்தானுக்குள் வருவதை நிறுத்த வேண்டும் என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பில்,

“சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை அமெரிக்கா மீறுகிறது. தோஹாவில் எங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் அமெரிக்கா மீறுகிறது. அமெரிக்க ட்ரோன்கள் ஆப்கானிஸ்தானுக்குள் வருவதை நிறுத்த வேண்டும். ஆப்கானிஸ்தான் வான்வெளியில் அமெரிக்க ட்ரோன்கள் பறப்பதை நிறுத்தவில்லை என்றால் அதற்கான விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்

இது குறித்து அமெரிக்கா தரப்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. இதுவரை எந்த ஒரு நாடும் ஆப்கானிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. இருப்பினும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தலிபான்கள் கட்டவிழ்த்துள்ளனர்.

மேலும், கைகளைத் துண்டிப்பது போன்ற கடுமையான தண்டனைகள் தொடரும் என்று தலிபான்களின் தலைவர் முல்லா நூருதீன் துராபி தெரிவித்துள்ளார்.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 29 = 32

Back to top button
error: