crossorigin="anonymous">
உள்நாடுபொது

வட மாகாணத்திற்கு 276 வைத்தியர்கள் நியமிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி

வடக்கு மாகாணத்திற்கு 276 வைத்தியர்கள் புதிதாக நியமிப்பதற்கான அனுமதியினை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் உள்ளக பயிற்சியினை நிறைவு செய்த வைத்தியர்கள் வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நியமனத்தின்படி முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வைத்திய சாலைகளுக்கு 28 வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு (மாஞ்சோலை) 17 பேர், மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு 04 பேர், மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு ஒருவர், கொக்குளாய் பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர், மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு ஒருவர்,

நட்டாங்கண்டல் பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர், சம்பத்நுவர பிரதேச வைத்தியசாலைக்கு ஒருவர், துணுக்காய் வைத்தியசாலைக்கு ஒருவர், வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 85 − = 79

Back to top button
error: