இந்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அவர்கள் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்றைய தினம் (04) சந்தித்து, பன்முகத்தன்மையுள்ள இந்திய – இலங்கை பங்குடைமையை மேலும் வலுவாக்குவது குறித்த வினைத்திறன்மிக்க பேச்சுக்களில் ஈடுபட்டார்.
இலங்கை விஜயம் செய்துள்ள இந்திய வௌியுறவு செயலாளர் நேற்று (03) கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
நாட்டை வந்தடைந்த இந்திய வௌியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் வரவேற்றார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்களும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.