ஜப்பானில் கொரோனா வைரஸ் எதிரான தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்
கொரோனா நோய்க்கு எதிரான தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத் திட்டத்தை ஜப்பான் ஆரம்பித்துள்ளது. ஜப்பானில் இந்த நோய் பரவல் தீவிரம் பெற்றுள்ள நிலையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஜப்பானின் மொத்த சனத் தொகையில் 5 சதவீதமானோருக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதுடன் முதல் கட்டமாக ஒசாக்கா மற்றும் டோக்கியோ நகரங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
டோக்கியோ நகரில் நாளாந்தம் 5000 பேருக்கும் ஒசாகா நகரில் நாளாந்தம் 2500 பேருக்கும் தடுப்பூசி ஏற்ற ஜப்பான் எதிர்பார்த்துள்ளது இதற்கு மோடேர்னா என்று அழைக்கப்படும் தடுப்பூசியை இதற்காக பயன்படுத்த ஜப்பான் அதிகாரிகள் அங்கீகாரம் அளித்து இருக்கிறார்கள்.
ஜப்பானில் 65 வயதைத் தாண்டியவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை ஜூலை மாத இறுதிப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தடுப்பூசி ஏற்றுவதற்காக ஜப்பான் இராணுவத்தினர் தடுப்பூசி ஏற்றும் நிலையங்களை அமைத்து இருக்கிறார்கள் ஜப்பானில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு சுகாதார ரீதியான பல்வேறு நெருக்கடிகள் தலைதூக்கி இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.