கொழும்பு தேசிய வைத்தியசாலையில், கொவிட் தொற்று நோய் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருதய சத்திர சிகிச்சை (பைபாஸ்) அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்தார்.
இந்த நாட்களில், இருதய சத்திரசிகிச்சைக்காக (பைபாஸ்) காத்திருக்கும் பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சத்திர சிகிச்சைக்கு தயாராகும் வகையில் சத்திர சிகிச்சை அறைகள் கிருமி நீக்கம் செய்யப்படுவதாக வைத்தியர் கஜநாயக்க கூறினார்.
அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில், இரண்டு சத்திர சிகிச்சை அறைகளில், தினமும் சுமார் 5 இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்படி இருதய சத்திரசிகிச்சைக்காக (பைபாஸ்) காத்திருக்கும் பட்டியலில் உள்ள நோயாளர்களை அவசரமாக சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த முடியும் என்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.