crossorigin="anonymous">
உள்நாடுபொது

9 ஆவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – பிரான்ஸ் நட்புறவு சங்க தலைவராக அமைச்சர் நாமல்

இலங்கை பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் (Sri Lanka – France Parliamentary Friendship Association) புதிய தலைவராக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் அபிவிருத்தி கூட்டிணைப்பு, கண்காணிப்பு அமைச்சரும், டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ நேற்று (06) தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (06) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவர்ட்டு விசேட விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயகவும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.

இலங்கை பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் இசுறு தொடங்கொட அவர்களும், உப தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூவரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்ஷன தெனிப்பிட்டிய அவர்களும் உப செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 72 = 81

Back to top button
error: