இலங்கை பொலிசார் நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொண்ட நடவடிக்கையின்போது தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 636 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதுடன் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமைக்காக ஒரே நாளில் ஆகக் கூடுதலானவர்கள் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதில் ஆகக்கூடுதலானவர்கள் மாத்தளை மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை 206 ஆகும். தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமைக்காக இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,700 தாண்டுகிறது.
மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் பலவிடங்களிலும் தற்சமயம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நாட்டில் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு இடங்களிலும் கூடுதலான வாகன விபத்துக்கள் இடம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதுடன் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மாத்திரம் ஐந்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.