இலங்கையின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் பலதடவைகள் சிறிதளவான மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. என வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் இன்று (09) வெளியிடப்பட்ட வானிலை அறிக்கை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில்
“வடக்கு மாகாணத்தில் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது”. எனவும் வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது