crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரசாங்கம்  நாட்டை இருட்டுக்குள் கொண்டு செல்கின்றது – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

அரசாங்கம் இந்த நாட்டை இருட்டுக்குள் கொண்டு செல்கின்றதேயன்றி வெளிச்சத்திற்கு கொண்டு செல்லுவதற்கான அறிகுறியே இல்லை எனவும் சுபீட்சத்துக்குப் பதிலாக அரசாங்கம் நாட்டை அமைதியின்மை மற்றும் அழுத்தத்தையே பிரயோகிக்கின்றது எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்

தொகுதி உதவி அமைப்பாளர் அசேல பிரேமலால் கருணாரத்ன அவர்களின் அலுவலகத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் நேற்று (08) பங்கேற்றபோது எதிர்க்கட்சித் தலைவர் இது பற்றித் தெரிவித்தார்

ஒருபுறம் தொழில்வாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக இளைஞர்கள் வேலையின்மையால் அவதிப்படுவதாகவும், மறுபுறம் விவசாய சமூகம் ஆதரவற்றவர்களாகிவிட்டனர் எனவும் அவர் கூறினார் ஒட்டுமொத்த மக்களும் தங்கள் வாழ்வில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், இந்த நிலையை மாற்றக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியே என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் பிரதியமைச்சர் நியோமால் பெரேரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 95 − = 88

Back to top button
error: