crossorigin="anonymous">
வெளிநாடு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்புக்கு எதிரான சட்டம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்புக்கு எதிரான சட்டம் தொடரும் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் கருக்கலைப்புக்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 6 வாரங்கள் நிரம்பிய பெண்கள் கருக்கலைப்பில் ஈடுபடக் கூடாது என அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தை ஆளும் குடியரசுக் கட்சி கொண்டுவந்த இந்தச் சட்டம் அமெரிக்கா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மனித உரிமை அமைப்புகள், பெண் அமைப்புகள் இச்சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தின. மேலும், இந்தத் தடையைத் திரும்பப் பெற வேண்டும் என்று அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை வியாழக்கிழமையன்று விசாரித்த நீதிபதி ராபர்ட் பிட்மேன், பெண்கள் தங்கள் வாழ்வின் மீதான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது சட்டவிரோதமாகத் தடுக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றம் அனுமதிக்காது என்று கூறி, தடையை நீக்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்குத் தொடர்பான மேல்முறையீடு டெக்சாஸ் மாகாணம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நியூ ஆர்லியன்ஸ் நீதிமன்றம் கருக்கலைப்புக்கு எதிரான தடை தற்காலிகமாகத் தொடரும் எனத் தீர்ப்பளித்துள்ளது.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 6 =

Back to top button
error: