பயணக்கட்டுப்பாடு மற்றும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் அரச பொறிமுறையுடன் தொடர்புகளை மேற்கொண்டு அத்தியாவசிய சேவைகள் குறித்த தகவல்களை பொது மக்கள் கேட்டறிவதற்காக 24 மணித்தியாளங்களும் செயல்படும் 1965 என்ற அவசர தொலை பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவை தொடர்பான நிகழ்வு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது.
இந்த அவசர விசேட தொலைபேசி இலக்கம் இன்று முதல் செயற்படுவதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
24 மணித்தியாலமும் இயங்கும் இந்த தொலைபேசி சேவையின் ஊடாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அந்த செயலணி தெரிவித்துள்ளது.
தற்போதும் எதிர்வரும் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேடமாக பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் அத்தியாவசிய பொருள் விநியோகம் மற்றும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும்போதும் ஏற்படும் பிரச்சினைகள் அந்தந்த அரச நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தல் மற்றும் பொது மக்கள் செயல் திறன் மிக்கதாக இநத பணிகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான இணைப்பு மத்திய நிலையமாக 1965 என்ற அவசர தொலை பேசி மத்திய நிலையம் செயல்படும்