crossorigin="anonymous">
வெளிநாடு

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்

இந்தியா – தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, 74 மையங்களில் இன்று (12) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அதற்காக அங்கு பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிற்பகலில் இருந்து முடிவுகள் தெரியவரும்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத் தேர்தல் ஆகியவற்றை மாநில தேர்தல் ஆணையம் கடந்த செப்.13-ம் தேதி அறிவித்தது. மொத்தம் 27,791 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருந்தது.

3,346 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் 24,416 பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 76 லட்சத்து 60 ஆயிரம் பேர் வாக்காளர்களாவர்.

கடந்த 6-ம் தேதி 9 மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங்களில் 7,921 வாக்குச்சாவடிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் மொத்தம் 77.43 சதவீதம் வாக்குகள் பதிவாயின. 2-ம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 78.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதுதவிர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. அதில் 70.51 சதவீத வாக்குகள் பதிவாகின.

இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இடம்பெற்ற வாக்குப் பெட்டிகள் 74 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வரும் வழிகள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சிமன்றத் தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என வாக்குகளை வகை பிரிக்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளில்போதிய பாதுகாப்பு தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 2 =

Back to top button
error: