உள்நாடுபிராந்தியம்
ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு கலாநிதி சுரேன் ராகவன் விஜயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு நேற்று (17) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த விஜயத்தின் போது ஓட்டுத் தொழிற்சாலையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
கைத்தொழில் அமைச்சின் ஊடாக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு மீள்ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலையின் மூலம் ஒட்டிசுட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஒட்டுசுட்டான் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.சத்தியசுதர்சன் அவர்களும் இக் கண்காணிப்பு விஜயத்தில் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுடன் இணைந்துகொண்டார்.