crossorigin="anonymous">
உள்நாடுபொது

2021 தேசிய மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு மரம் நடுகை மற்றும் துஆ பிரார்த்தனை

2021 தேசிய மீலாதுன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தினத்தை முன்னிட்டு மரம் நடுகை மற்றும் துஆ பிரார்த்தனைகள் இன்று (19) மருதானை ஜும்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் இடம் பெற்றது.

மரம் நடுகை மற்றும் துஆ பிரார்த்தனைநிகழ்வில் பிரதம அதிதி நீதியமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி (PC), பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. ஐ. அன்சார், வக்ப் சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன், ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ், பிரதமரின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கான ஒருங்கிணைப்புச் செயலாளர் திரு. பர்ஸான் மன்சூர், முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்பாளர் அஷ் ஷெயக் ஹசன் மௌலானா உட்பட

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான திரு. எம்.எல்.எம். அன்வர் அலி மற்றும் திரு. எம்.எஸ். அலா அஹமட், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், அனைத்து மதங்களினதும் மதத் தலைவர்கள், மருதானை ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகிகள் போன்றோரின் பங்குபற்றுதலுடன் இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 83 − 73 =

Back to top button
error: