பெண்கள் உரிமை சார் அரசு சார்பற்ற நிறுவனமான கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் (ESDF) ஊடகத்துறையில் பெண் ஊடகவியலாளர்களினை முன்னிலைப்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பெண் ஊடகவிலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்ச்சி பட்டறை மட்டக்களப்பு மன்ரேசா மண்டபத்தில் இடம்பெற்றது.
இப் பயிற்சி நெறியில் பெண் ஊடகவியலாளர்களுக்காக ஊடகத்தில் பெண்களின் குரல் (wvm) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
பயிற்ச்சி நெறியின் வளவாளர்களாக மொகமட் அஸாட் மற்றும் புகாரி மொகமட் கலந்து கொண்டதுடன் 3 மாவட்டங்களில் இருந்தும் 33 பெண் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.