இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நியூசிலாந்து பாராளுமன்ற சபாநாயகர் ட்ரேவர் மலர்ட் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (21) வீடியோ தொழினுட்பத்தினூடாக இடம்பெற்றது.
இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயத்தை அண்மையில் திறந்தமை தொடர்பில் தனது நன்றிகளைத் தெரிவித்த சபாநாயகர், இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கிடையில் 65 வருடங்களுக்கு மேலாகக் காணப்படும் இருதரப்பு உறவுகள் இதன்மூலம் மேலும் விரிவடைவதாகச் சுட்டிக்காட்டினார்.
நியூசிலாந்து சபாநாயகரின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் நீதி அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தற்போதைய நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினரான திருமதி வனுஷி வோல்டர்ஸ் மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைகள் அபல்டன் ஆகியோர் வீடியோ தொழினுட்பத்தினூடாக கலந்துகொண்டனர்.