அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஒத்துழைப்பிற்கும் ஒருகிணைப்பிற்குமான குழு, கடந்த 2021.10.15 ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொழும்பு மாநகர சபை தேசிய நூலகம் உட்பட 12 பொது வாசிகசாலைகளின் பிரதானிகளைச் சந்தித்து ஜம்இய்யாவின் சிங்கள மொழியிலான வெளியீடுகளை வழங்கி வைத்தனர்.
வழங்கப்பட்ட வெளியீடுகள் – சிங்கள மொழியிலான புனித அல் குர்ஆன் விளக்கவுரை, சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல் என்ற தலைபிலான கைநூல்கள் (சமாஜ சங்வாத), பரந்த பார்வையில் இஸ்லாம் (விவுர்த தேசின் இஸ்லாமய), மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம் (அன்தவாதியெக் நொவமு) ஆகிய நூல்கள் வழங்கப்பட்டுள்ளன
இந் நிகழ்வில் ஜம்இய்யாவின் உதவிப் பொதுச் செயலாளர் அஷ் ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம், ஒத்துழைப்பிற்கும் ஒருகிணைப்பிற்குமான குழுவின் உதவிச் செயலாளர் அஷ் ஷைக் பரூத் பாரூக் மற்றும் ஒத்துழைப்பிற்கும் ஒருகிணைப்புகுமான குழு அங்கத்தவர் அல் ஹாஜ் அன்வர் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.