இலங்கை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் வெளிநாட்டு அமைச்சில் வைத்து விடைபெறும் நிமித்தம் நேற்று (21) சந்தித்தார்.
இந்த சந்திப்பில் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸூம் அமெரிக்கத் தூதுவர் டெப்லிஸ்ட்டும் எதிர்காலத்தில் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் சம்பந்தமாக குறிப்பாக சர்வதேச வரத்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பு சார்ந்த விடயங்கள் உள்ளடங்கலாக கலந்துரையாடினர்.