இலங்கையில் அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (25) ஆரம்பமாகியதுடன் அதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்ட இடைவெளியின் பின் முதல் 200 மாணவர்களுக்கு குறைவாக காணப்படுகின்ற பாடசாலைகள் முதற் கட்டமாக திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் இன்று (25) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் வடக்கு கல்வி வலயத்தின் கீழான கண்டாவளை கோட்டத்தில் 17 பாடசாலைகளும்,பளை கோட்டத்தில் 10 பாடசாலைகளும், தெற்கு கல்வி வலயத்தின் கீழான கரைச்சி கோட்டத்தில் 13 பாடசாலைகளும், பூநகரி கோட்டத்தில் 12 பாடசாலைகளும் இயங்க ஆரம்பித்துள்ளன.
பாடசாலைகளில் மாணவர்களுக்கான சுகாதார நடைமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர்கள் பாடசாலைக்குச் சமூகமளித்தமையினை அவதானிக்க முடிகின்றது.