crossorigin="anonymous">
வெளிநாடு

சீனாவில் கொரோனா டெல்டா வைரஸ் மீண்டும் பரவல், பல பகுதிகளில் ஊரடங்கு

வெளி மாகாணங்களில் இருந்து பெய்ஜிங் வருவதற்கு தடை

சீனாவில் கரோனா டெல்டா வைரஸ் மீண்டும் பரவுகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட் டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதி யில் சீனாவின் வூஹானில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெ ரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அடுத் தடுத்து கரோனா அலைகள் உருவாகி வருகின்றன.

சீனாவில் இதுவரை 223 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதாவது 76 சதவீத மக்களுக்கு இரு தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. எனினும் அங்கும் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடிய வில்லை. சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள உள்மங்கோலியாவின் எஜின் நகரில் வேகமாக பரவி வருகிறது. அங்கு பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைய மூத்த அதிகாரி வூ லியாங்யூ, பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறும்போது, “உள்மங்கோலியா பகுதியில் கரோனா டெல்டா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அங்கிருந்து சுமார் 11 மாகா ணங்களுக்கு வைரஸ் பரவியுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடு களை விதித்துள்ளோம்” என்று தெரி வித்தார்.

முன்னெச்சரிக்கையாக தலைநகர் பெய்ஜிங்கில் பல்வேறு பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெளி மாகாணங்களில் இருந்து பெய்ஜிங் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 96 − 88 =

Back to top button
error: