crossorigin="anonymous">
வெளிநாடு

ஜப்பானின் அரச குடும்ப இளவரசி மகோ தன் வகுப்பு காதலனை திருமணம்

ஜப்பானின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மகோ தன் வகுப்புத் தோழரும், சாமானியருமான கெய் கொமுரு என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

ஜப்பானிய சட்டப்படி, அந்நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள், பொது மக்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அப்பெண் தன் அரச குடும்ப தகுதியை இழந்துவிடுவார்.

ஆனால் ஓர் அரச குடும்பத்து ஆண், ஒரு வெகுஜனப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால், அவர் தன் அரச குடும்பத் தகுதியை இழக்கமாட்டார்.

ஜப்பானிய அரச குடும்பத்து வழக்கப்படி, அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவோருக்கு 150 மில்லியன் யென் பணம் கொடுப்பது வழக்கம். அத்தொகையைப் பெற மகோ மறுத்துள்ளார்.

அதே போல அவரது திருமணத்தில் ஜப்பானிய அரச குடும்பத்தின் வழக்கங்கள் சடங்குகள் பின்பற்றப்படவில்லை. இந்த இரண்டையும் மறுத்த முதல் அரச குடும்பத்துப் பெண் என்கிற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 − 32 =

Back to top button
error: