அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் நேற்று (27) கொழும்பு, மட்டக்குளி பகுதிக்கு விஜயம் செய்து, கட்சியின் ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள் மற்றும் நலன்விரும்பிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 06 மாத காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த, தலைவர் ரிஷாட் பதியுதீன், இன்று முதன் முறையாக மட்டக்குளி பகுதிக்குச் சென்றிருந்த போது, ஆதரவாளர்களும், கட்சித் தொண்டர்களும், அபிமாணிகளும், முக்கியஸ்தர்களும் அவரை ஆரத்தழுவி சுகம் விசாரித்தனர் .
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.ஜே.எம் பாயிஸின் இல்லத்தில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைவருடன், கட்சியின் தேசிய அமைப்பாளர், முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூபும் உடன் சென்றிருந்தார்.
ரிஷாத் பதியுதீனின் வருகையை அறிந்து பாராளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட முக்கியஸ்தர் அர்ஷட் நிசாம்தீன் ஆகியோரும் தலைவரை சந்திப்பதற்காக அங்கு வருகை தந்திருந்தனர்.
இதேவெளை, கட்சியின் முக்கியஸ்தர்களால் விஷேட துஆப் பிரார்த்தனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு மாவட்ட மக்கள், தன் மீது வைத்திருக்கும் அக்கறைக்கும், அன்பிற்கும் நன்றி தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், மக்களின் பிரச்சினைகளுக்காக தான் தொடர்ந்தும் பாடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.