கண்டி – அக்குறணை இலக்கம் 478/03 கசாவத்தையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அக்குறணை ஸாஹிரா தேசிய கல்லூரியின் முன்னாள் ஓய்வுபெற்ற ஆசிரியர் மெளலவி டி.ஜி.ஜி.எச்.எல்.எம். சிஹாபுதீன் (பஹ்ஜி) அவர்கள் தனது 80 ஆவது வயதில் இன்று (30.10.2021) காலமானார்
காலம் சென்ற சாஹுல் ஹமீட் மற்றும் பாதிமுத்து தம்பதிகளின் ஏக புதல்வரும், காலம் சென்ற சித்தி ஸாஹிரா மற்றும் சித்தி பரீதாவின் அன்புக் கணவரும், ஊடகவியலாளர் டி.ஜி.எம்.எஸ்.எம்.ராபி (ராபி சிஹாப்தீன்) அவர்களின் அன்புத் தந்தையும், பாத்திமா ரிஸ்னாவின் மாமனாரும், மொஹமட் ராயித் அவர்களின் அப்பாவும் ஆவார்
இவர் அட்டாளச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்றப்பட்ட ஆசிரியர் என்பதுடன் கலேவெல மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பாடசாலைகளில் ஆசிரிய சேவையில் பணியாற்றிவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அக்குறணை கசாவத்தை கிராமத்தின் ஆரம்ப காலங்களிலிருந்து மக்களை நல்வழிப்படுத்துவதிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை மார்க்க ரீதியாக நல்வழிப்படுத்துவதிலும் மாணவர்களுக்கு சிறந்த உலக கல்வியை வழங்குவதிலும் அரும்பாடுபட்டவர் என்பதோடு கசாவத்தை கிராமத்தின் பாடசாலை மற்றும் அல்ஹுதா ஜும்மாஹ் பள்ளியை உருவாக்குவதில் ஆரம்ப காலங்களில் முன்னிண்டவர்களில் முக்கிய நபர்களில் ஓருவருமாவார்
மொஹமட் ஜப்பார், மொஹமட் நஷீர், மொஹமட் உவைஸ், மொஹமட் இஸ்மாயில், அப்துல் வஹாப், மொஹமட் தம்சீர், காலம் சென்ற மொஹமட் ராசிக், சித்தி ஸாஹிரா, சித்தி ரமீசா ஆகியோர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.