(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)
மாத்தளை சாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி பரீனா கலீல் இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தரத்திற்கு கல்விச் சேவை ஆணைக்குழுவால் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் கல்விச்சேவை ஆணைக்குழு 1.1.2020 ம் திகதி முதல் அமுலாகும் வகையில் முற்திகதியிட்டு இந்நியமனத்தை வழங்கியுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியான இவர் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியரும், இலங்கைத் திறந்த பல்கலைக்கழக பட்டப்பின் படிப்பு கல்வி டிப்லோமா பட்டதாரியுமாவார்.
1984ம் ஆண்டு மாத்தளை மாவட்ட குரிவல ஹமீதியா மகா வித்தியாலயத்தில் உதவி ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் 1987ம் ஆண்டு வரை அங்கு சேவையாற்றியுள்ளார். பின்னர் மா/ உக்குவல அஜ்மீர் தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று 2017ம் ஆண்டு வரை அப்பாடசாலையில் 30 வருடங்கள் தொடர்ந்து சேவையாற்றியுள்ளார்.
அங்கு கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது 2010ம் ஆண்டு இடம் பெற்ற அதிபர் தரம் 2 ற்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அதே பாடசாலைக்கு பிரதி அதிபராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் மாத்தளை சாஹிரா கல்லூரிக்கு 2017 ம் ஆண்டு முதல் இடமாற்றம் பெற்று அங்கு இது வரை பிரதி அதிபராக கடமையாற்றி வருகிறார்.
உக்குவலையைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் காலம் சென்ற இப்ராஹிம் சாஹிப் அவர்களின் புதல்வியும், ஓய்வுபெற்ற இலங்கைப் பொலீஸ் சேவையின் சப் இங்ஸ்பெக்டரும், கவிஞருமான மடளைக் கலீலின் துணைவியுமாவார்.