crossorigin="anonymous">
வெளிநாடு

ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு

ஐரோப்பிய நாடுகளிலும், மத்திய ஆசிய நாடுகளிலும் கரோனா வைரஸ் தொற்றும், உயிரிழப்பும் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் எச்சரித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் நேற்று ஜெனிவாவில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

”ஒவ்வொரு வாரமும், கரோனாவில் உயிரிழப்போர் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் இருந்து வருகிறது. அதிகாரபூர்வமின்றி பல மரணங்கள் கரோனாவால் நடக்கின்றன. இதுவரை 50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.

கடந்த 7 நாட்களில் 56 நாடுகளில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று 10 சதவீதம் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. இதனால் மீண்டும் படுக்கை வசதி பற்றாக்குறை, ஐசியு பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கூறுகிறேன், நமக்குப் பல அனுபவங்கள் கிடைத்துவிட்டன, இனிமேலும் மோசமான நாட்களை அனுமதிக்கக் கூடாது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நம்மிடம் அனைத்துக் கருவிகளும், தடுப்பு நடவடிக்கைகளும் இருக்கின்றன.

அதை ஒவ்வொருவரும் பயன்படுத்தி, கரோனா தொற்று பரவாமல் தடுக்க வேண்டும். ஐரோப்பாவில் ஒவ்வொரு சிறிய நாடும், மத்திய ஆசியாவிலும் கரோனா வைரஸ் மீண்டும் விஸ்வரூபமெடுத்து வருகிறது. மீண்டும் கரோனாவுக்கு எதிராகப் போராட்டம் தொடங்கியுள்ளது.

ஐரோப்பாவில் மீண்டும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருப்து மிகப்பெரிய கவலையை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் 18 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் 6 சதவீதமும், மத்திய ஆசியாவில் 12 சதவீதமும் கரோனா தொற்று கடந்த வாரத்தில் அதிகரித்துள்ளது.

கடந்த 4 வாரங்களாக, ஐரோப்பாவில், கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் 55 சதவீதம் அதிகரித்துள்ளது. மீண்டும் ஐரோப்பிய நாடுகள் கரோனா தொற்றின் மையப்பகுதியாக மாறும் சூழல் உருவாகியுள்ளது”. இவ்வாறு டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்தார்(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 32 = 39

Back to top button
error: