Qingdao Seawin சர்ச்சைக்குரிய சேதன உரத்தை விநியோகித்த சீன நிறுவனம், இலங்கையில் உள்ள தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் மேலதிக பணிப்பாளரிடம் இருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை கோரி நஷ்டஈடு கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நஷ்டஈட்டை கடிதம் கிடைத்து 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறும் அவ்வாறு, நிராகரிக்கப்பட்ட சீன சேதனப் பசளை நிறுவனமான Qingdao Seawin இக்கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் குறித்த நிறுவனம் சார்பில் சட்டத்தரணி எம்.ஜே.எஸ். பொன்சேகாவினால் அனுப்பப்பட்ட கடிதம் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக, நியூஸ் பெஸ்ட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயினும் இது தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வமாக எவ்வித கடிதமும் கிடைக்கவில்லையென, விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.