மட்டக்களப்பில் முஸ்லிம் விவாக பதிவாளர் பதவி வெற்றிட நேர்முகத்தேர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிறப்பு, இறப்பு, பொது விவாகப் பதிவாளர் மற்றும் முஸ்லிம் விவாகப் பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிலவிவரும் நிலையில் அவ்வெற்றிடங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வெற்றிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு கட்டங்கட்டமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலகத்தில் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் மாவட்டத்தில் முஸ்லிம் விவாகப் பதிவாளர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்ற பகுதிகளில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை மற்றும் பிறைந்துரைச்சேனை பதிவாளர் பிரிவுகளுக்கும், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ரிதிதென்ன பதிவாளர் பிரிவிற்கும், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தியாவட்டவான் பதிவாளர் பிரிவிற்குமான முஸ்லிம் விவாகப் பதிவாளர்களைத் nதெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு இன்று (9) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இப் பதவி வெற்றிடங்களுக்காக விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு ஆர்வத்துடன் சமுகந்தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.