முதலீட்டுச் சபை எதிர்வரும் 11ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) முன்னிலையில் அழைக்கப்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
புதிய ஏற்றுமதி செயற்பாட்டு வலையத்தை அமைக்கும் செயற்பாடு தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் செயலாற்று அறிக்கை இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.
இளைஞர் சேவை (பிரைவட்) லிமிடட் நிறுவனத்துடன் இளைஞர் சேவை மன்றம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, தொழில்நுட்ப சேவை (பிரைவட்) லிமிடட் நிறுவனத்துடன், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், கல்ஓய பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன நவம்பர் மாதம் 16, 17, 23, 24 மற்றும் 30ஆம் திகதிகளில் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, வர்த்தக முகாமைத்துவத்துக்கான தேசிய நிறுவனம், இலங்கை மன்றக் கல்லூரி மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை என்பன முறையே எதிர்வரும் டிசம்பர் மாதம் 01, 02, 07 மற்றும் 09ஆம் திகதிகளில் அழைக்கப்பட்டுள்ளன.
சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி தேவையான அதிகாரிகளின் பங்களிப்புடன் கோப் குழுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.