crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸை சந்திப்பு

கடமை முடிந்து நாடு திரும்பும் ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை இன்று (10) வெளிநாட்டு அமைச்சில் வைத்து பிரியாவிடை பெறும் நிமித்தம் சந்தித்தார்.

கருத்துத் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், கடினமான காலங்களில் ஜப்பான் இலங்கையின் உண்மையான நண்பராக இருந்ததாகக் குறிப்பிட்டதுடன், கோவிட்-19 தொற்று நோயால் முன்வைக்கப்பட்ட சவால்களை சமாளிப்பதற்காக இலங்கைக்கு ஆதரவை வழங்குவதில் தூதுவர் சுகியாமாவின் அர்ப்பணிப்பு முயற்சிகளைப் பாராட்டினார்.

ஜப்பானிய அபிவிருத்தி உதவியின் கீழ் இந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் குறிப்பாக விவசாயம், நீர்ப்பாசனம், குடிநீர், வீதி அபிவிருத்தி போன்ற துறைகளில் ஜப்பானின் பங்களிப்பை இலங்கை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டார். ஜப்பானிய உதவி எப்போதும் நாட்டின் உண்மையான தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்ததுடன், அவை ஒருபோதும் முன்நிபந்தனைகளுடன் இணைக்கப்பட்டதாக அமையவில்லை எனக் குறிப்பிட்டார்.

தூதுவர் சுகியாமா தனது உத்தியோகபூர்வ ஆணையை உயர் திருப்திகரமானதாக வழங்குவதற்காக நிபந்தனையற்ற மற்றும் கட்டுப்பாடற்ற அணுகலை வழங்கியமைக்காக, இலங்கையில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும், வெளிநாட்டு அமைச்சருக்கும் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு, இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ள நிலையில், தற்போதுள்ள விரிவான இலங்கை – ஜப்பான் பங்காளித்துவத்தை மேலும் உயர்த்துவதற்குப் பொருத்தமான சந்தர்ப்பமாக அமையும் என தூதுவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜப்பான் வெளிநாட்டு அமைச்சில் உயர் பதவியை ஏற்கவுள்ள தூதுவர் சுகியாமாவுக்கு பேராசிரியர் பீரிஸ் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தூதுவர் சுகியாமா 2018 நவம்பர் முதல் மூன்று வருடங்கள் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவராகப் பணியாற்றியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 2 = 5

Back to top button
error: