பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் மகள் சாரா டுட்ரேட் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரொட்ரிகோ டுட்ரேட் மகள் சாரா டுட்ரேட் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்ரேட் சர்ச்சைகளின் நாயகர். இவர் பிலிப்பைன்சில் யாரேனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும், விற்றாலும் அவர்களை சுட்டுக் கொன்றுவிடுவார். சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி எல்லாம் இவருக்குக் கவலையில்லை.
உரிமை ஆர்வலர்களின் பேச்சை இவர் துளியும் சட்டை செய்வதில்லை. இந்த சட்ட விரோதக் கொலை செய்வதற்கென்றே தனியாக ஒரு கும்பலை இவர் வைத்திருக்கிறார். 72 வயதாகும் ரொட்ரிகோ டுட்ரேட் 1986-ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டுவரை தேவோ நகரின் மேயராக இருந்தவர்.
அவரது ஆட்சிக்கு பிலிப்பைன்ஸில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது, இந்நிலையில் அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்தார். ஆனால் அதேவேளையில் தனது மகள் போட்டியிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் அரசியல் சாசனத்தின்படி ஒருவர் ஒரு முறை மட்டுமே ஜனாதிபதி இருக்க முடியும். அதனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறும் ரொட்ரிகோ தனது மகளை வைத்து மறைமுக அரசியல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், துணைஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சாரா டுட்ரேட் மனுத் தாக்கல் செய்துள்ளார். 43 வயதான சாரா, லாகாஸ் கிறிஸ்துவ முஸ்லிம் ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளார்.
நவம்பர் 15 ஆம் தேதி, வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துணை அதிபர் தேர்தலில் சாரா டுட்ரேட்டுக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.(இந்து)