இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரின் அழைப்பின் பெயரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தூதுக்குழு கடந்த 2021.11.12 ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டது.
அதில் ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எஸ்.எச். ஆதம்பாவா, உதவிச் செயலாளர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் மற்றும் சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் ஆகியோர் ஜம்இய்யாவின் சார்பில் கலந்து கொண்டனர்.
இதன்போது இந்தியாவுடனான உறவு பற்றியும், கல்வி மற்றும் இனங்களுக்கிடையில் சகவாழ்வை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் எதிர்கால கூட்டு முயற்சிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.