இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மருந்தான ‘Molnupiravir’ வில்லையை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஒளடத உற்பத்திகள், வழங்குகள் மற்றும் மருந்துகள் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நிபுணர்கள் குழுவினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு விடுத்த கோரிக்கை தொடர்பில் பரிசீலித்த பின்னர் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வைத்தியசாலையில் அனுமதித்தல் மற்றும் மரணமடைதல் வீதத்தை 50% ஆக குறைக்கும் வாய் மூலமான உள்ளெடுக்கும் மருந்தை Merck எனும் மருந்து உற்பத்தி நிறுவனம் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, அதனை தமது நாட்டில் பயன்படுத்த ஐக்கிய இராச்சியம் அனுமதி வழங்கியிருந்தது.