crossorigin="anonymous">
வெளிநாடு

ஒரு மணி நேரம் 25 நிமிடம் அமெரிக்க பொறுப்பு ஜனாதிபதியாக செயல்பட்ட கமலா ஹாரிஸ்

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், சுமார் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் மட்டும் அமெரிக்க பொறுப்பு ஜனாதிபதியாக செயல்பட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெருங்குடல் நோய்க்காக அவருக்கு மயக்கவியல் நிபுணர்கள் அன்ஸ்தீஸியா எனப்படும் மயக்க மருந்தை செலுத்தி சிகிச்சை வழங்கினர். இதனால் சிகிச்சை முடிந்த ஜனாதிபதி இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையில் அவரது அதிகாரங்கள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுமார் 1 மணி நேரம் 25 நிமிடம் ஜனாதிபதி பொறுப்பு அதிகாரம் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்ற அவர், அமெரிக்காவின் தற்காலிக ஜனாதிபதி முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அமெரிக்க அரசியலமைப்பு வரலாற்றில் இது போன்று தற்காலிக ஜனாதிபதி பொறுப்பு நிகழ்வு 2005, 2007 ஆண்டுகளில் ஜார்ஜ் டபிள்யு புஷ் ஜனாதிபதி இருந்த போது நடந்ததாகக் கூறப்படுகிறது.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 20 − = 16

Back to top button
error: