சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷாய் பாதுகாப்பு குறித்து அச்சம்
சீன டென்னிஸ் வீராங்கனை பத்திரமாக இருக்கிறாரா என்று அச்சம் – காணொளி காட்டும் சீனா
சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷாய் பாதுகாப்பாக இருக்கிறாரா என்று பலரும் அச்சம் வெளியிட்டுவருகின்றனர்.
அவர் பாதுகாப்பாக இருப்பதாக காட்டுவதற்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது சீன ஊடகம். ஆனால், அந்தக் காணொளி போதாது என்கிறது பெண்கள் டென்னிஸ் சங்கம்.
சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷாய் (Peng Shuai) தன் நண்பர்களுடனும், பயிற்றுநருடனும் வெளியே சென்று உணவருந்துவது போன்ற இரு காணொளிகளை வெளியிட்டன.
அது பெங் ஷாயின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி போதாது என பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் தலைவர் ஸ்டீவ் சிமோன் கூறியுள்ளார். “அவரைப் பார்ப்பது நல்ல செய்தி என்றாலும், அவர் எந்தவித நெருக்குதல் மற்றும் அழுத்தங்களின்றி சுதந்திரமாக, தான் நினைப்பதை செய்ய முடிகிறதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை” என ஸ்டீவ் சிமோன் கூறினார்.
இது குறித்து அமெரிக்காவுக்கான சீன தூதர் க்வின் கேங்குக்கு ஸ்டீவ் கடிதம் ஒன்றையும் எழுதினார். சீனாவை விட்டு வெளியேற பெங் அனுமதிக்கப்பட வேண்டும் அல்லது பெங் தனியாக (அவருடன் யாருமின்றி) காணொளி அழைப்பு மூலம் தன்னோடு பேச வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
35 வயதான பெங் ஷாய், சில வாரங்களுக்கு முன் முன்னாள் சீன துணை பிரதமர் ஒருவர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதன் பிறகு அவரைக் குறித்த எந்த விவரங்களும் தெரியவில்லை.(பிபிசி)