crossorigin="anonymous">
உள்நாடுபொது

2022 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை

2022ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை (22) மாலை 5மணிக்கு நடைபெறவுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இம்மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதற்கமைவாக வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13 ஆம் திகதி ஆரம்பமானது. பாராளுமன்றத்தில் ஏழு நாட்களாக நடைபெறும் விவாதம் நாளை 22ஆம் திகதி மாலையுடன் நிறைவடைகிறது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பையடுத்து நாளை மறுதினம் 23ஆம் திகதி செவ்வாய்க் கிழமை முதல் குழு நிலையிலான விவாதம் ஆரம்பமாகவிருப்பதுடன், சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசம்பர் 10ஆம் திகதி வரை 16 நாட்கள் விவாதம் இடம்பெறும்.

வரவுசெலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

வரவுசெலவுத்திட்டம் நடைபெறும் காலப்பகுதியில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புக்கு சமாந்தரமாக கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்காக இவ்வருடம் வரவுசெலவுத்திட்ட விவாதத்தை சைகை மொழியிலும் ஒளிபரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 45 − = 44

Back to top button
error: