உள்நாடுபிராந்தியம்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் உலருணவுப் பொதிகள் அன்பளிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் கொவிட் 19 பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் கடந்த வெள்ளிக்கிழமை (19) பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
RYTHM நிறுவனத்தின் நிதி அனுசரனையிலும், CHA (Consortium of Humanitarian Agencies) நிறுவனத்தின் செயற்படுத்தலிலும் அத்தியவசியமான உலருணவுப்பொருட்கள் அடங்கியதாக ஒருவருக்கு ரூபா 4,290 பெறுமதியான உலருணவுப் பொருட்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந், கிராம சேவகர் – நிர்வாகம், RYTHM மற்றும் CHA நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் குறித்த பயனாளிகள் கலந்தகொண்டிருந்தனர்.