crossorigin="anonymous">
வெளிநாடு

சிரியா ஜனாதிபதி தேர்தலில் பஷார் அல் அசாத் மீண்டும் வெற்றி

சிரியாவின் ஜனாதிபதி தேர்தல் நான்காவது முறையாக வெற்றி பெற்று பஷார்அல்அசாத் மீண்டும் அந்நாட்டின் ஜனாதிபதியாகிறார். சிரியாவில் கடந்த 26ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் 70%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின

பதிவான 78.6 சதவீத வாக்குகளில் அசாத் 95.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஹமூடாசபாக் நேரலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அசாத்தை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா சலோம் அப்துல்லா மற்றும் மகமோத்அகமத் மாரி ஆகிய இருவரும் முறையே 1.5% மற்றும் 3.3% வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

இத்தேர்தல் முடிவு நியாயமற்றது என்று அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் விமர்சித்துள்ளன. போரினால் புலம்பெயர்ந்தவர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

ஆனால் வாக்களிக்க வந்த சிரியாவின் ஜனாதிபதி அசாத், மேற்கத்திய நாடுகளின் கூற்றை யாரும் கருத்தில் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 57 + = 66

Back to top button
error: