crossorigin="anonymous">
உள்நாடுபொது

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் குறிஞ்சாக்கேணி பயண படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவிக்கும் வகையிலும் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் துக்க தினம் அனுஷ்டிக்குமாறு கிண்ணியா பிரதேச சிவில் அமைப்புகளின் ஒன்றியம், பள்ளிவாயில்கள் சம்மேளனம், உலமா சபை, ஸுரா சபை மற்றும் வர்த்தக சங்கங்கள் ஆகியன ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளது.

விடுத்துள்ள கோரிக்கையில் இன்றைய தினம் (25) அனைத்து வீடுகள், கடைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வௌ்ளை கொடிகளை பறக்கவிட்டு, அமைதியான முறையில் துக்க தினத்தை அனுஷ்டிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை மூடி துக்க தின அனுஷ்டிப்புக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கிண்ணியா சிவில் சமூக ஒன்றியம் கோரியுள்ளது.

பிரதேசத்தில் ஒன்றுகூடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தவிர்த்து அனைவரும் தங்களின் வீடுகளிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்காக விசேட பிரேர்தனைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 24 = 31

Back to top button
error: