வெளிநாடு
வியட்நாமில் புதிய கோவிட் திரிபும் பரவல்
பிரிட்டனில் பரவிய கொரோனா வகையும் இந்தியாவில் பரவிய கொரோனா வகையும் கலந்த ஒரு புதிய கோவிட் திரிபும் வியட்நாமில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளதுடன் இந்த வகை திரிபு காற்றில் வேகமாகப் பரவி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வியட்நாமில் பரவும் புதிய திரிபு “மிக ஆபத்தானது” என வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் குயேன் தெரிவித்துள்ளார்.
வைரஸ்களில் எப்போதும் பிறழ்வுகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். ஆனால் சில பிறழ்வுகள் முக்கியமற்றதாக இருக்கலாம். ஆனால் சில அந்த வைரஸ்களை அதிக பரவும் தன்மை கொண்டதாக மாற்றிவிடுகிறது.
2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலாக கோவிட்-19 கண்டறியப்பட்டது தொடங்கி இன்றுவரை ஆயிரக்கணக்கான முறையில் பிறழ்வுகள் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.