crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஊடகவியலாளர் மீதான தாக்குதலை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது

திருகோணமலை – கிண்ணியா குருஞ்சான்ங்கேணி பயணப்படகு விபத்து சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டித்து சுதந்திர ஊடக இயக்கம் (FMM) அறிக்கை வெளியிட்டுள்ளது

சுதந்திர ஊடக இயக்கம் (FMM) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

“திருகோணமலை, கிண்ணியாவில் படகு விபத்து குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மூவர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. லேக்ஹவுஸ் தினகரன் நாளிதழின் உள்ளூர் செய்தியாளர் அப்துல் சலாம் முகம்மட் யாசிம், தாம் தாக்கப்பட்டதகவும் தனது கையடக்கத் தொலைபேசி அபகரிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டி கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்; முறைப்பாடு இல. CIB (1) 10/291. ஊடகவியலாளர் யாசிம் தாக்கப்பட்ட நேரத்தில் சக்தி நியூஸ் பெஸ்ட் (News First) நிருபர் எம்.ஹலால்தீன் மற்றும் தினகரன் ஊடகவியலாளர் ஏ. எல். எம்.ரஃபாய்தீனையும் தாக்கி அவர்கள் அறிக்கையிடுவதை தடுத்து விரட்டியடித்துள்ளனர்.

கிண்ணியாவில் இடம்பெற்ற சம்பவம் மிகவும் துயரகரமானதும் உணர்வுப்பூர்வமானதும், சமூகப் பொறுப்பு கொண்டதாக இருந்தாலும், அது தொடர்பான அனைத்து உண்மையும் துல்லியமான தகவல்களையும் தெரிவிக்கும் ஊடகங்களின் உரிமையை எந்த தரப்பினராலோ அல்லது குழுவினாலோ தடுத்தல் முறையல்ல.

எனவே, இந்தத் தாக்குதலையும், ஊடகவியலாளர்களின் தொழில்முறைப் பணிகளுக்கு எந்தத் தரப்பினராலும் இடையூறு விளைவிக்கப்படுவதை பாரதூரமான சம்பவமாக சுதந்திர ஊடக இயக்கம் கண்டிக்கிறது.

நாட்டின் எந்தப் பகுதியிலும் சட்டத்தை அமுல்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும், இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு சுதந்திர ஊடக இயக்கம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.” எனவும் சுதந்திர ஊடக இயக்கம் (FMM) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: