crossorigin="anonymous">
உள்நாடுபொது

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் அருகில் கடற்படையினரால் இயந்திர படகுச் சேவை

திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் அருகில் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பான இயந்திரப் படகுச் சேவை பாதுகாப்பு முறைகளை கையாண்டு பயணிகளை இக்கரையில் இருந்து அக்கரைக்கு ஏற்றி இறக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படகு சேவையானது கடற்படையனரின் பாதுகாப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பாலத்தின் புனர்நிர்மாண வேலைகள் நிறைவு பெறும் வரை இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக தினந்தோறும் இச்சேவை மேற்கொள்ளப்படும்.

பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோர் பாதுகாப்பான இப்படகு சேவையில் பாதுகாப்பு அங்கிகளை அணிந்து பயணிக்கக்கூடியதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாண வேலைகளை மேற்கொண்டு விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 2 = 11

Back to top button
error: