crossorigin="anonymous">
வெளிநாடு

விமான நிலையத்தை சீனாவிடம் வாங்கிய கடனுக்காக இழக்கும் அபாயம்

உகாண்டா அரசு தனது சர்வதேச விமான நிலையத்தை சீனாவிடம் வாங்கிய கடனுக்காக இழக்கும் அபாயத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

உகாண்டா கடந்த 2015-ஆம் ஆண்டு அந்நாட்டிலுள்ள ஒரே ஒரு சர்வதேச விமான நிலையமான எண்டெபெ (Entebbe) விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக சீனாவின் எக்ஸிம் பொதுத்துறை வங்கியிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற்றுள்ளது.

20 ஆண்டிற்குள் அக் கடனை 2 % வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றும், கடனை செலுத்த தவறினால் அந்நாட்டில் உள்ள அரசு சொத்துக்கள் அடமானமாக பெறப்படும் என்றும், எண்டெபெ விமான நிலையத்தை எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாமல் ஒப்படைக்க வேண்டும் என்றும் சீன அரசு விதிமுறை விதித்திருந்தது.

இந்நிலையில் உகாண்டாவின் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்து வருவதால் சீனாவிடம் தனது சர்வதேச விமான நிலையத்தை இழக்கும் அபாய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உகாண்டாவின் நிதியமைச்சர் இக்கடன் ஒப்பந்தத்தில் தவறு செய்துவிட்டதாக கூறி நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 25 − = 21

Back to top button
error: