இலங்கையில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 ஒக்டொபரின் 7.6 சதவீதத்திலிருந்து 2021 நவம்பரில் 9.9 சதவீதத்திற்கு அதிகரித்ததுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (30) தெரிவித்துள்ளது
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், 2021 ஒக்டொபரின் 4.8 சதவீதத்திலிருந்து 2021 நவம்பரில் 5.3 சதவீதத்திற்கு அதிகரித்தது.
இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது.
உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஒத்தோபரின் 12.8 சதவீதத்திலிருந்து 2021 நவம்பரில் 17.5 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஒத்தோபரின் 5.4 சதவீதத்திலிருந்து 2021 நவம்பரில் 6.4 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது.