இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான புதிய சுகாதார வழிகாட்டல் கோவை இன்று (01) முதல் அமுலுக்குவருகின்றது.
இன்று தொடக்கம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை பின்வரும் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அமுலில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
01.திருமண நிகழ்வுகள் நடத்தப்படும் மண்டபங்களில் ஒரே நேரத்தில் 200 பேருக்கு குறைவானவர்களே பங்கேற்க வேண்டும்.
02.அலுவலகம், மண்டபம் அல்லது அறையொன்றில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே தங்கியிருக்க அனுமதி.
03.மருந்தகங்கள், சுப்பர் மார்க்கட்டுக்கள் என்பனவற்றில் மூன்றில் ஒரு பகுதியினர் மாத்திரமே ஒரே தடவையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.
04.மொத்த வர்த்தகத்திற்காக மாத்திரம் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படுவது அவசியம்.
05. சந்தைகள், நடமாடும் வர்த்தக நிலையங்கள் என்பவற்றை சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுத்துச் செல்வது அவசியம்.
06. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் ஒரே தடவையில் 15 பேருக்கு மாத்திரமே அனுமதி.
07.திரையரங்குகளில் ஒரே தடவையில் 75 சதவீதமானோருக்கு மாத்திரமே அனுமதி.
08.மரண சடங்குகளில் 20 பேர் மாத்திரமே கலந்து கொள்ள அனுமதி .
09.வழிபாட்டுத்தலங்களில் இடம்பெறும் நிகழ்வுகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும்.
10. முடியுமான அளவில் ஒன்லைன் மூலம் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் சுகாதார வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் அன்றி வேறு எதற்காகவும் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.