இலங்கை முழுவதும் எரிவாயு விநியோகத்தை நேற்று (02) முதல் மறு அறிவித்தல் வரை
இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நுகர்வோர் விவகார அதிகார சபையோ அல்லது அமைச்சோ அவ்வாறான எந்த அறிவித்தலையும் தமது நிறுவனத்திற்கு வழங்கவில்லையென லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டப்ளியு.கெ. வேகபிடிய தெரிவித்தார்.
தமது நிறுவனத்தின் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.