இலங்கையிலும் ஒமிக்ரொன் கொரோனா வைரஸ் திரிபுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் இன்று (03) தெரிவித்துள்ளது.
நைஜீரியா நாட் டிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லா (03) தெரிவித்துள்ளார்