crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாகிஸ்தானில் இலங்கை பிரஜை கொலை தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் கண்டணம்

இலங்கை பிரஜை பிரியந்த குமார தியவதன என்பவரை பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியல்கோட்டில், நேற்று (03) சித்திரவதை செய்து, கொலை செய்து, அவரது உடலை எரித்துள்ள சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்

பாகிஸ்தான் பிரதமர், இதற்கு காரணமான அனைவருக்கும் சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ள அவர். “சியல்கோட்டில் உள்ள தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொடூரமான தாக்குதல் மற்றும் இலங்கை முகாமையாளர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட இன்றைய நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாளாகும். இது தொடர்பான விசாரணைகளை நான் கண்காணித்து வருகிறேன். அத்துடன் இதற்கு காரணமா அனைவரும் முழுமையான சட்டத்தை பிரயோகித்து கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.”

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 38 − = 35

Back to top button
error: